• போட்டியிட்டு
பொருள் ஈட்டி
சொத்து சேர்த்து
உடை உடுத்தி
அணி அணிந்து
தின்று கொழுத்து
கொழுப்பிறக்க
நடை நடந்து
ஓடும் வாழ்க்கையில்…
அவ்வப்போது
வந்து போகும்
பரிதாபமும் தன்னிரக்கமும்…
அப்போது
அவசியம் வேண்டும்
சாலையோர பிச்சைக்காரனும்
வரி விலக்கோடு
சில
அனாதை இல்லங்களும்