• ஓணான் பிடித்து
கயிறு கட்டி
மூக்குப் பொடி போட்டு
ஆட விட்டோம்
• கொண்டைச் சேவல்
காலில் கத்தி கட்டி
கத்தியில் நஞ்சு கொட்டி
கொஞ்சமாய் சாராயம் ஊட்டி
இரண்டில் ஒன்று
சாகும்வரை
சண்டை பார்த்தோம்
• கொம்புகள் முறிய
ஆட்டுக் கடாக்களின்
ஆட்டம் பார்த்தோம்
• கொப்பளிக்கும்
சிலருக்கு வீரம்
சிலருக்கு ரத்தம்
மாட்டோடு மனிதர்
மோதும் மஞ்சுவிரட்டு
• எங்கள் வீரவிளையாட்டில்
புதிதாய்ச் சேர்ந்தது
தனி ஈழம்
• கத்திக் கூச்சலிட்டு
கொடி பிடித்து
கெக்கலித்து
கவிதை எழுதி
வெறியேத்த
உற்சாகமாய் வந்தது
உச்சக்கட்டம்
மிச்சம் இல்லாமல்
செத்து விழுந்ததும்
உச்சிக் கொட்டி
கூட்டம் கலைந்தோம்
• ஆட்டம் முடிந்தால்
கூட்டம் கலையும்
செத்து விழுந்தது
ஆடோ மாடோ மனிதனோ…
சோதனை முயற்சி
ReplyDeleteசோதனை முயற்சி
ReplyDeleteJust to say hello
ReplyDeleteRaj
நல்ல தொடக்கம் பாதி வெற்றி என்பார்கள். நன்றாகத் தொடங்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி செல்லப்பா...
ReplyDelete